ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகில் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் (TN 37 AE 0105)தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்து கொண்டிருந்தனர் அப்போது குடிபோதையில் தந்தை வாகனத்தை ஓட்டியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி(KA 09 A 8487) குறுக்கே வாகனம் சென்றது, லாரி ஓட்டுனரின் சாதூரியத்தால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மேலும் காயமடைந்த தந்தை மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்ககு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
REPORTER MADHAN PRABHU M