தமிழ்நாடு காவலர் பணிக்கு.. சென்னையில் ஓர் இலவச பயிற்சி முகாம்
தமிழ்நாடு காவல் துறையில் 10906 காலியிடங்களுக்கு காவலர் பணிக்கு தேர்வு நடக்க இருப்பதால் இந்த தேர்வில் பங்கு பெற்று சிறப்பாக செயலாற்ற சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதியை சார்ந்த காவலர் பணியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்று பயன்பெறும் வகையில்
திரு .ஜெய்கணேஷ் ( உதவி ஆய்வாளர் ஜே9 துறைபாக்கம் காவல் நிலைய சட்ட மற்றும் ஒழுங்கு பிரிவு ) அவர்களின் முயற்சியில் ஜே9 காவல் நிலைய காவலர்களும் இணைந்து இந்த இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளனர் .
இதனை அடுத்து உதவி ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் கூறியதாவது இந்த இலவச பயிற்சி முகாமின் நோக்கம் என்பது காவல்துறையுடன் பொதுமக்களுடன் நல்லுறவு , குற்றத்தை எப்படி குறைப்பது என்பது நாம் யோசித்து கொண்டு இருக்கும் வேலையில் தொடர்ச்சியாகவே குற்றங்கள் நடைபெறும் இடங்களாகவே கல்லுக்குட்டை , கண்ணகிநகர் ,
செம்மஞ்சேரி ,கேனால் சாலை உள்ளிட்ட குடிசை பகுதி இடங்களே சொல்ல படுகின்றங்ன . இம்மாதிரி உருவாகி இருக்கும் இடங்களில் மாற்றதை கொண்டுவருவதக்கான முயற்சியே இந்த இலவச பயிற்சி முகாம் நோக்கம் . இதன் வழியாக இம்மாதிரியான குடிசை பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை இந்த இலவச பயிற்சி முகாமில் பங்குபெற செய்து அவர்களுக்கு உளவியல் ரீதியான தன்னம்பிக்கை அளித்து . உடல் தகுதிக்கான பயிற்சி அளித்து. காவலர் தேர்வில் பங்குபெற செய்து தனி சிறப்புமிக்க ஒரு காவலனாக உருவாக்கி அதன் வழியே அப்பகுதியில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களை காவலர் பணியில் ஈடுபடுத்தி இதன் வழியாகவே அந்த பகுதியில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதக்கான முயற்சியை மேற்கொள்வதே இந்த இலவச பயிற்சி முகாமின் நோக்கம். இதுமட்டுயின்றி மற்றும் நம் காவல் துறையின் பணி குறித்தும் அதில் பங்குபெறும் வழிகள் மற்றும் நாம் ஒரு காவலன் என்பதனால் ஏற்படும் பெருமைகள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள் , குற்றங்கள் உருவாவதற்கான காரணம் என்ன , குற்றம் உருவாகாமல் தடுப்பது எப்படி , குற்றம் நடைபெறும் இடங்கள் , சூழல்கள் என்ன என்பதனை உள்ளிட்ட அனைத்தும் தகவல்களையும் வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார் இத்துடன் இந்த இலவச பயிற்சி முகாமில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் குறித்தும் தொடர்ச்சியாக அடுத்த கட்ட பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் . இந்த முகாமில் பங்கு பெற்றுள்ள நீங்கள் உங்கள் திறமைகளை மென்மேலும் வலுப்படுத்தி தமிழக காவல் துறையில் இணைந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் . இம்மாதிரியான காவலர் இலவச பயிற்சி முகாம்களால் தமிழக முழுவதும் தொடங்கினாள் சிறந்த காவலர்கள் தமிழ்நாட்டில் உருவாவர்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது . மாற்றத்திற்கான முதல் படி முயற்சியே இதன் நோக்கம் ….
