மேலஅனுப்பானடியில் விற்கப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யாமல் தவறான செயலுக்கு பயன்படுத்தியதை கண்டித்ததால் முன்னால் ஓனருக்கு அடி, உதை
மதுரை மாநகர், தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலஅனுப்பானடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் பச்சமால் மகன் திரு. சக்திவேல் வயது 34/2020, இவர் அழகுமலையான் டிரேடர்ஸ் என்ற பெயரில் ரைஸ் மில் நடத்தி வருகிறார்.
இவரிடம் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர் , இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் சொந்த தேவைக்காக வைத்திருந்த TN 58 P 8753 TATA ACE என்ற வாகனத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற குட்டை கண்ணன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் மேற்படி கண்ணன் அவர்கள் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யாமலே வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார் . வாகனத்தை ரேஷன் பொருட்கள் கடத்துவதற்கும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வந்திருக்கின்றார்
மேற்படி விபரம் சக்கிவேலுக்கு தெரிய வரவே, அவர் உடனே வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யச் சொல்லி பல முறை கூறியும் அவர் அதை செய்யவில்லை ,
இந்நிலையில்
இது சம்பந்தமாக கண்ணன், சக்திவேலை கடந்த 05/10/2020 ம் தேதி இரவு 8 மணிக்கு ஐராவதநல்லூர், செல்வகணபதி ரைஸ் மில் அருகே வருமாறு கூறியதின் பேரில் சக்திவேலும் அவருடன் பணிபுரியும் முத்துகண்ணன் என்பவரும் செல்வகணபதி ரைஸ் மில் அருகே வந்த போது வாகனத்தை, பெயர் மாற்றம் செய்ய முடியாது என்றும், பெயர் மாற்றம் செய்யாமல்தான் பயன்படுத்துவேன், கூறியதோடு வாய் தகராறு செய்து, இருவரையும் தாக்கியுள்ளார், காயங்கள் சிறியதானதால், மருத்துவ மனை செல்ல வில்லை, ஆனால் பயந்து வீட்டிற்கு வந்து விட்டனர், அதன்பின் கடந்த 7 ம் தேதி தெப்பகுளம் B 3, காவல் நிலையத்தில் புகாரளித்தனர்,
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் கனேசன் அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வாளர் திரு. கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு சிவராமகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார், அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.