கேரளா டூ தமிழகம் . காரில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்..! முகநூல் காதல் விபரீதம்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த முகநூல் காதலனுடன் சேர்த்துவைப்பதாக கூறி கேரள மாணவியை காரில் அழைத்துச்சென்ற ஆண் நண்பர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்து ஓசூர் பேருந்து நிலையத்தில் நிர்கதியாக விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தரணி. 20 வயதான தரணி, முகநூலில் அறிமுகமான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் பழகியுள்ளார்.
அந்த மாணவியும் தரணியுடன் முகநூலில் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் நேரில் சந்திக்கும் ஆவலுடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவருக்கு கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரும் மாணவி மீது காதல் வயப்பட்டு காதலை தெரிவித்துள்ளார்.
அதற்கு மாணவி தான் ஏற்கனவே காதலில் விழுந்து விட்டதாகவும் , தனது முகநூல் காதலன் தரணி குறித்தும் விபின்ராஜிடம் தெரிவித்த மாணவி, நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவ்வப்போது விபின்ராஜ் மாணவியிடம் பேசி வந்த நிலையில் தான் கிருஷ்ணகிரியில் உள்ள காதலன் தரணியை சந்திக்க செல்வதாக கூறியுள்ளார். அப்போது விபின் ராஜ் நான் பெங்களூர் செல்ல இருப்பதாகவும் தானே காரில் கொண்டு சென்று விடுவதாக நம்பிக்கையூட்டிய விபின்ராஜ் , கடந்த 2ந்தேதி முக்கம் பகுதியில் இருந்து மாணவியுடன் காரில் புறப்பட்டுள்ளான். வழியில் தனது கூட்டாளிகளான அகித்ராஜ், ஜோபின் ஆகிய இருவரை காரில் ஏற்றிக் கொண்டுள்ளான்.
காரில் மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது சாலையோரம் மறைவான இடத்தில் காரை நிறுத்தி விபின்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் காயங்களுடன் மாணவியை ஓசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு மாணவி அழைத்தபடி அங்கு சென்ற மாணவியின் முகநூல் காதலனிடம் மாணவியை அழைத்து வந்த செலவு என ரூபாய் பத்தாயிரம் கேட்டுள்ளனர் ஆனால் ஏழையான மாணவியின் முகநூல் காதலன் பணத்தைப் புரட்ட முடியாததால் பணத்தை புரட்டி கூகுள் பே மூலம் தங்களது வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி பெயர் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு எண் விபரங்களையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர் அந்த பலாத்கார கும்பல். காதலனை சந்திக்க வந்த இடத்தில் ஆண் நண்பர்களால் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது காதலனிடம் தெரிவித்துள்ளார் மாணவி. இதையடுத்து முக நூல் காதலன் தரணி, மாணவியை அழைத்து செல்ல முற்படும்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து போலீசார் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் நிற்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் மாணவியிடம் அவரது பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது மாணவியின் பெற்றோர் தாங்கள் கேரளாவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் அதனால் இரண்டு நாட்கள் பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டனர் போலீசார் உடனே முகநூல் காதலனுடன் மாணவியை அனுப்பி இரண்டு நாட்கள் பாதுகாக்கும் படியும் நாங்கள் அழைக்கும் போது வர வேண்டும் என்று அவனது முகவரியையும் பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனத்தை மட்டும் காவல்நிலையத்தில் வைத்துக்கொண்டு அனுப்பினர். அதன் பின்னர் கேரளா போலீசார் சம்பந்தப்பட்ட தமிழக காவல் நிலையம் சென்று விபரத்தை தெரிந்துகொண்டு முகநூல் காதலனையும் மாணவியையும் கேரளாவுக்கு அழைத்து சென்றனர். கேரளாவுக்கு அழைத்து சென்ற போலீசார் மாணவியின் பெற்றோர் “காணவில்லை” என்று கொடுத்திருந்த புகாரை மாற்றி முகநூல் காதலன் கடத்திச் சென்றதாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் அதன்பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது மாணவி மருத்துவரிடம் தன்னை கேரளாவில் இருந்து காரில் அழைத்து சென்றவர்கள் தான் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் எனது முகநூல் காதலன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யாமல் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் கேரளாவை சேர்ந்த தனது ஆண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்து தமிழகத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டதாகவும் கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏற்கனவே மாணவியை பாதுகாப்பாக வைத்திருந்த முகநூல் காதலனை போக்சோ சட்டத்தில் கைது செய்திருந்ததால் விழிபிதுங்கி நின்ற நிலையில் தற்போது மாணவியின் வாக்குமூல படி மாணவியை காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவில் இருந்து மாணவியை காரில் அழைத்துச் சென்ற மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மாணவியை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற கார் எண் மற்றும் ஆண் நண்பர்கள் விபரத்தை மாணவியின் முகநூல் காதலன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்காமல், தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று வாழ்க்கை கொடுப்பதாக ஆறுதல் கூறியுள்ளார் முகநூல் காதலன். அங்கு வைத்து அவன் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறவில்லை என்று கூறப்படுகிறது.
தன்னை காரில் அழைத்துச் சென்ற 3 பேர் பலாத்காரம் செய்ததாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளத்தை சேர்ந்த ஆண் நண்பர்கள் விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தாங்களாகவே விரும்பி காதல் வயப்பட்டாலும், அவர்களை பாதிக்கப் பட்டவர்களாகவே பார்க்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளதால் காதலன் தரணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த காவல் துறையினர், பெற்றோர், செல்போனும் கையுமாக சுற்றும் தங்கள் பிள்ளைகளை முறையாக கண்காணிக்க தவறினால் இது போன்ற விபரீதங்கள் நிகழ காரணமாகிவிடும் என்கின்றனர்.
அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் முகநூலில் மூழ்கியதால், காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இந்த பள்ளி மாணவிக்கு நடந்த சம்பவம் சாட்டிங்கில் மூழ்கும் இளசுகளுக்கு ஒரு எச்சரிக்கை பாடம்