Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி

மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி

மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பாஸ்கரதாஸ் நகர், 5 ம் பிளாக் டோர் நம்பர் 82 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமு மகன் சந்திரசேகரன் வயது 43/2020, இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் இவர் தினமும் ஆட்டோ சவாரி முடித்து இரவு ஆட்டோவை திடீர் நகர் கருமாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்வதைவழக்கமாக கொண்டிருந்தார்,

சம்பவ நாளன்று 04/10/2020 ம் தேதி வழக்கம் போல சந்திரசேகரன் சவாரி முடித்து இரவு ஆட்டோவை திடீர் நகர் கருமாரியம்மன் கோவில் அருகே நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு சுமார் 1.30 மணியளவில் சந்திரசேகரன் அவரது நண்பர்களுடன் தனது ஆட்டோ அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள், அப்போது அவருக்கு நன்கு தெரிந்த, திடீர் நகரை சேர்ந்த 1) இப்ராஹிம் ஷா, வயது 27, /2020,
2) வெள்ளையன் என்ற சுதர்சனம் வயது 21/2020,
3) பெயிண்டர் ராகவேந்திரா வயது 20/2020,
4) மூக்கன் பாலா, வயது 22/2020,
5) அஞ்சான் சிவா, வயது 19/2020,
6) பேபி தினேஷ் வயது 19/2020, மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து பெரிய வாள் மற்றும் கத்தியை கையில் வைத்துக் கொண்டு சந்திரசேகரிடம் நாங்கதான்டா இந்த ஏரியாவில் பெரிய ரவுடிகள் என கூறிக் கொண்டே சந்திரசேகரனுடைய ஆட்டோ TN 64 V 0171 என்ற ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தார்கள், அதற்கு சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவை சேதப்படுத்தியவர்களை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சந்திரசேகரனையும், அவரது நண்பர்களையும் தகாத வார்த்தைகளால் தீட்டியும் அவர்கள் கையில் வைத்திருந்த வாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு சென்று விட்டனர். இதனை தொடர்ந்து சந்திரசேகர் அவர்கள் C1, காவல் நிலையம் வந்து 05/10/2020 ம் தேதி நடந்த சம்பவத்தை புகாராக கொடுத்தார்,

புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் மேற்படி நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து , கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.