செங்கல்பட்டு,
இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோதமாக பதுங்கி இருந்துள்ளார்.
பெங்களூருவில் சிக்கினான்
இங்கிருந்தபடியே இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுடன் கட்ட காமினி நேரடி தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருடைய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனை அறிந்த அவர் காஞ்சீபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தப்பி சென்றுவிட்டார்.
இதனை அறிந்த காஞ்சீபுரம் கியூ பிரிவு போலீஸ் தனிப்படையினர் தப்பிச்சென்ற கட்டகாமினியை பெங்களூருவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது
கர்நாடகத்தில் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு: மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் கைது
போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
சுரண்டையில் மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
சுரண்டையில் மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது மங்களூரு போலீசார் நடவடிக்கை
போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
