அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
30.10.2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 29.10.2020 ம் தேதி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AV பட்டி ரோடு அருகே ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 519 மதுபான பாட்டில்களை வடமதுரை காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றினர். மேலும் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 1882 மதுபான பாட்டில்களை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
