புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், திருநெல்வேலி ஆயுதப் படை காவல் துறையினர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை காக்க பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை காவல் துறையினர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் புரவி புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்பு காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உதகதரவின்படி மாவட்ட ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் அறிவுருத்தலின்படி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் தலைமையில் 37 ஆயுதப் படை காவலர்கள் மக்களை காக்க பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்
