அரியலூர்மாவட்டம் பிறந்து 3 நாட்களில் கைவிடப்பட்ட குழந்தைக்கு ஆதரவளித்த காவல் துணை கண்காணிப்பாளர்
அரியலூர் மாவட்டம்¸ திருமானூரில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழும் சத்தத்தைக் கேட்டு¸ காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்செய்தியை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து¸ குழந்தையை அன்னை காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தைக்கு தேவையான பொருட்களை வழங்கினார். காவல்துறையினரின் இச்செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
