மதுரையில் ஊரடங்கை மீறியதாக நேற்று 1260 பேர் மீது வழக்கு பதிவு
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக வாகன ஓட்டுநர்கள், வணிக நிறுவனங்கள், போராட்டம் நடத்திய கட்சி நிர்வாகிகள் மற்றும் பங்கேற்றவர்கள் என சுமார் 1260 பேர் மீது மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.