விபத்தை தடுக்கும் பொருட்டு சாலையை சீர் செய்த காவலர்கள்
திருவாரூர் − நாகை மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பள்ளத்தை சீர் செய்யும் பொருட்டு காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலையை சீர் செய்தனர். இச்செயலை கண்ட பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
