மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர்
மதுரை மாநகரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் திரு. பிரசன்னவெங்கடேஷ் அவர்கள் உதவி கோட்டப்பொறியாளர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு. செல்வம், திரு. சிங்காரவேலன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன்படி மதுரை சிவகங்கை சாலை, மேலமடை வண்டியூர் கண்மாய் நீர் வெளியேறும் வழியான பாண்டிகோவில் தரைப்பாலம் ஆகிய இடங்களில் முன்னும் பின்னும் இரவு நேரங்களில் மிளிரும் பட்டைகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஒட்டப்பட்டன. மேலும் மதுரை to தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அவணியாபுரம் to சாமநத்தம் பிரிவு அதற்கு அடுத்தாற்போல் உள்ள ஈச்சனேரி வைக்கம் பெரியார் நகர் சந்திப்பு சாலை அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதை தவிர்கும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாறன் அவர்கள் தலைமையில் விபத்துப்பகுதிகளை ஆய்வு செய்து விபத்து பகுதி என்று அறிவிப்பு பலகையும் மெதுவான வேகத்தில் செல்லவும் என்ற அறிவிப்பு பலகையும் மற்றும் வாகனங்களின் வேக வரம்பு குறித்த அறிவிப்பு பலகையும் நிறுவினார்கள். மேலும் சாலை போக்குவரத்து விதிகளை பற்றிய விழிப்புணர்வை போது மக்களுக்கு ஏற்படுத்தினர்.
