மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
கடந்த 03/09/2012−ம் தேதியன்று மதுரை மாநகர் , செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள K.R.விஜயலெக்ஷிமி திருமண மஹாலில் செல்லூர் மேலத் தோப்புவை சேர்ந்த சிவனாண்டி மகன் பழனிச்சாமி வயது 57, என்பவரின் மகன் ஜெயபாண்டி வயது 34, என்பவருக்கு 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக மதுரை மாவட்ட சமூக சீர்திருத்தவாதியான திருமதி. ஆனந்தவள்ளி அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்லூர் D2, காவல் நிலையத்தில் குழந்தை திருமண வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,இவ்வழக்கு இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
கடந்த 27/01/2021 அன்று மாண்புமிகு நீதிதுறை நடுவர் திரு. பத்மநாபன் அவர்கள் இவ்வழக்கை விசாரணை செய்தார்கள். விசாரணையின் முடிவில் மூன்று நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரிகள் மதுரை காளவாசல், பாண்டியன் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாலகிருஷ்ணன்,வயது 44, மதுரை, செல்லூர், மேலத்தோப்பை சேர்ந்த சிவனாண்டி மகன் பழனிச்சாமி 57 , மற்றும் மதுரை செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெயபாண்டி வயது 34 ஆகிய மூன்று நபர்களுக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா ரூபாய் 5000/− அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் புலன்விசாரணை அதிகாரி 2012 ம் வருடம் D2, செல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. புலிகுட்டி அய்யனார் ( தற்போது D1, தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் ) அவர்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் பாராட்டினார்கள்.
பெற்றோர்களின் முக்கிய கவணத்திற்கு, குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிப்போம், அவர்களின் எதிர்கால கணவுகளை நிறைவேற்றுவோம்.
