குற்றங்களை தடுக்க நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
05.02.2021
நாங்குநேரி உட்கோட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் 9 சிசிடிவி கேமரா, களக்காடு காவல் நிலையத்தில் 28 மற்றும் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் 5சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்கள் திறந்து வைத்தார்.
*இந்நிகழ்ச்சியின் போது நாங்குநேரி,களக்காடு, மூலக்கரைப்பட்டியில் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வண்ணம் மொத்தம் 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நாங்குநேரி,களக்காடு, மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிசிடிவி கண்காணிப்பு அறை 24×7 என்ற சுழற்சி முறையில் கண்காணிக்கப்படுவதுடன் இதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் களக்காடு காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையினையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரக்கன்றுகளையும்நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், களக்காடு காவல் ஆய்வாளர் திரு காளியப்பன் , உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.