மதுரை, பெத்தானியாபுரத்தில், கழிவுநீர் வாய்காலில் தவறிவிழுந்து உயிருக்கு போராடிய கன்றுக் குட்டியை காப்பாற்றிய தீயணைப்புதுறையினர்
மதுரை, பெத்தானியாபுரம், காமராஜர்புரம் முதல் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்காலில் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து மேலே வரமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது, இதை கண்ட பொது மக்கள் அதை காப்பாற்ற தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்த மதுரை திடீர் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர் ட்ரான்ஸ்போர்ட் ஆபிசர் திரு. ரா. கண்ணன் அவர்கள் தலைமையில் முன்னனி தீயணைப்பாளர் திரு.செ. கனேஷ் மற்றும் ஆறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர், அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை தக்க உபகரணங்களுடன் காப்பாற்றினர்.
வாய் இல்லா ஜீவன் கன்றுக்குட்டியை சிறந்த மனிதாபிமான முறையில் போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
