சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி, மதுரை செல்லூர் பகுதியில் போலீசார் அணிவகுப்பு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில், செல்லூர் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மீனாட்சிபுரம், வெங்கடாஜலபதி தியேட்டரிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பை தல்லாகுளம் சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சேகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, தலைமை வகித்துச்சென்றார். குலமங்களம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, சிவகாமி தெரு, செல்லூர் 60 அடி, 50 அடி வழியாக பாலம் ஸ்டேஷன் ரோடு வந்து திருவாப்புடையார் கோவில் அருகே நிறைவு பெற்றது.இந்த போலீசாரின் கொடி அணிவகுப்பை செல்லூர் ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள், திருப்பாலை ஆய்வாளர் திரு பார்த்திபன் அவர்கள், தல்லகுளம் ஆய்வளர் திரு. வனசுந்தரம் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். கொடி அணிவகுப்பில் அனைத்து சார்பு ஆய்வாளர்கள், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுத்து சென்றனர்.
