மதுரை, தத்தனேரி பகுதியில் நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய செல்லூர் போலீசார்
மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலையம், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி ,நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 21 ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் நிலைய காவல் ஆளிநர்கள் த.க.3380, செந்தில்பாண்டி, மற்றும், மு.நி.க.2395, சிலம்பரசன் ஆகியோர்களுடன் சரக ரோந்து செய்து மதுரை மாநகர், தத்தனேரி, களத்துப்பொட்டல், பின்புறம் உள்ள வயல் பகுதியில் கண்காணிப்பு செய்த போது அங்கு ஒருவன் சந்தேகப்படும்படியாக மறைந்து நின்றிருந்தான், அவனை நோக்கி காவலர்கள் செல்லும் போது அவன் அங்கிருந்து தப்பியோட முயற்ச்சித்தான், உடனே காவலர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது, அவன் மதுரை, தத்தனேரி, களத்துப்பொட்டல், வ.உசி. 2 வது தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் விஷ்ணு என்ற மூனுமண்டையன், வயது 17/21, என தெரியவந்தது, அந்த நேரத்தில் அவன் அங்கிருந்ததற்கான காரணத்தை கேட்கும் போது சரியான பதில் சொல்லாமல் முன்னுக்குபின் முரனான பதிலை கூறினான், அவனை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவனிடம் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பயங்கரமான ஆயுதமான கத்தியை மறைத்து வைத்திருந்தான், அதன்பின் விசாரணையில் அவன் மீது ஏற்கனவே பல கொலை, மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக தெரியவந்தது. சென்ற வருடம் காளிமுத்து என என்பவரை தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளான், காளிமுத்துவின் கோஷ்டியை சேர்ந்த மணி என்ற குள்ளமணி தன்னுடைய நண்பர்களை ஏற்கனவே போட்டுத்தள்ளியுள்ளான், எனவே அடுத்து தன்னையும் போட்டுதள்ள முயற்ச்சிப்பான் என்ற எண்ணத்தில் அவனை முன்கூட்டியே கொலை செய்யும் நோக்குடன் அங்கு பதுங்கியிருந்ததாக கூறினான். மேற்படி எதிரியின் வாக்குமூலத்தின் அடிப்படையின் அவனை கைது செய்து, நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர.
