
மது அருந்துவதை கண்டித்த மனைவியை அவதூறாக பேசி, அடித்து காயப்படுத்திய கணவர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் ,சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதியார் நகரை சேர்ந்த ஆமினா பானு வயது 37 என்பவரின் கணவரான செய்யது அலி நவாஷ் வயது 38 என்பவருக்கு மதுஅருந்து பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.இதனால் கோபமடைந்த செய்யது அலி நவாஷ் ,23.08.2021அன்று வீட்டில் வைத்து ஆமினா பானுவை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆமினா பானு, சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திருமதி.மார்க்ரெட் தெரேசா அவர்கள் விசாரணை மேற்கொண்டு எதிரி செய்யது அலி நவாஸை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
