மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் சொத்தில் பங்கு கேட்டு தகராறு, காவல்துறையினர் விசாரணை
மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 1 வது தெருவில் வசித்து வருபவர் சொக்கலிங்கம் மகன் கந்தகுமார் வயது 28/21,, இவர் தன் தாய் விஜயா அவர்களுடன் வசித்து வருகிறார். இவரது தகப்பனார் சொக்கலிங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் இவர் C. A. படித்து வருகிறார், இவரது பாட்டி தெய்வானை , இவரது அப்பா சொக்கலிங்கத்திற்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தராமல் மகள்களின் பேருக்கு எழுதி வைத்துள்ளார், இதனால் கந்தகுமாரின் தாயார் விஜயா மதுரை மாவட்ட 6 வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இந்த நிலையில் கந்தகுமார் தான் குடியிருந்த வீட்டை பராமரிப்பு செய்வதற்காக வீட்டை காலி செய்து தபால்தந்தி நகர் பக்கம் தற்காலிகமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். தன் வீட்டை மராமத்து வேலை செய்ய வந்த போது கந்தகுமாரின் மாமா ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மீனாள் ஆகிய இருவரும் கந்தகுமாரை வீடு மராமத்து செய்ய விடாமல் தடுத்து வந்ததால் அவரது தாயார் விஜயா கடந்த 19 ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து கொண்டு உள்ள நிலையில் கடந்த 20 ம் தேதி கந்தகுமார், தன் தாயார் விஜயாவுடன் ஜீவா நகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்த போது கந்தகுமாரின் மாமா ராஜேந்திரன், மற்றும் அவரது மனைவி மீனாம்பாள் ஆகியோர் வீட்டிற்குள் நுழைய விடாமல் பூட்டிய வீட்டில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்திருந்தனர், கந்தகுமாரின் தாயார் விஜயா , தெய்வானை இல்லத்திற்கு முன்பு யார் எங்கள் வீட்டை பூட்டியது என கேட்டதும் எதிரிகள் இருவரும் வந்து விஜயாவை கையைப் பிடித்து இழுத்து அடித்து சண்டையிட்டுள்ளனர் இதனை தொடர்ந்து கந்தகுமார் காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. C.சேதுமணிமாதவன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் R.முருகன் வழக்கு பதிவு செய்தார், அதன்பிறகு ஆய்வாளர் அவர்கள் வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
