சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
திருநெல்வேலி 24.09.2020
தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து(35) என்பவரை தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு சாம்சன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 1கிலோ 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
