டெல்லியில் மாஸ்க் போடாமல் வெளியில் நடமாடினால் 10 மணி நேரம் ஜெயில், விரைவில் மற்ற மாநிலங்களில்
குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றத்தை அதிகரிக்கத்தான் உதவுகிறது மற்றும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கும் என்பதுதான் உண்மை இதைத் தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவாது என்பதுதான் உண்மை, இதைத்தான் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியில் கடந்த 10 ம் தேதி நாம் கூறியிருந்தோம், நமது கருத்தை ஆதரிப்பதை போல இன்று டெல்லியில் அபராதத்திற்கு பதில் 10 மணி நேரம் ஜெயில் என்று செய்தி வந்துள்ளது, நிச்சயம் இதற்கு நல்ல பலன் கிடைக்கும் இது போலவே குற்றங்களில் சிறிய குற்றங்கள் , மிகச் சிறிய குற்றங்கள் என நிறைய உள்ளன, அவைகளில் சிறிய குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத சிறைத்தண்டனையும் உண்டு இதையே சில சமயம் நீதிபதிகள் தன் சுய விருப்பத்தின்படி ஒரு நாள் சிறைத்தண்டனை என அறிவிக்கின்றனர், இதையை மிகச் சிறிய குற்றங்களின் வரிசையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடினால் 10 மணி நேரம் சிறை என்பது வரவேற்க்க தக்கவை,
தண்டனையில் சிறை தண்டனை மட்டுமே இருக்க வேண்டும்
குற்றத்தண்டனைக்கு அபராதம் விதிப்பது, குற்றம் புரிந்தவருக்கு எந்த வகையிலும் கஷ்டத்தை தராமல் அவர்கள் மேலும் மேலும் குற்றம் செய்த்தான் தூண்டும்.குற்றத்திற்கு சிறைத்தண்டனைதான் நல்லது
