மதுரை, உறங்கான்பட்டி ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி, விழா கமிட்டியாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு
மதுரை, மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் உள்ள ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்தியதாக விழா கமிட்டியினர் காளமேகம் என்ற திருநாவுக்கரசு, மற்றும் ஐந்து விழா கமிட்டிப் பொருப்பாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

