Police Recruitment

கூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்

வண்டலூரை அடுத்த நல்லாம்பாக்கத்தில் பாலிடெக்னிக் மாணவரை சுட்டுக்கொன்ற கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படையில் சேர அழைத்ததாகவும் வராததால் ஆத்திரத்தில் சுட்டுக்கொன்றேன் என தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது மூத்த மகன் முகேஷ் (19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார். முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். எங்கு […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் துறையில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாருக்கு பணியிட மாற்றம்: தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?

மதுரை  மதுரை நகரில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாரை வெளி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரி கின்றனர். காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும், அவர்கள் தரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்தாரர்களை அலைக்கழிக்கக் கூடாது, லஞ்சம் பெறக் கூடாது, சமரசம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடக் கூடாது என போலீஸாருக்கு காவல் ஆணை […]

Police Recruitment

நெடுஞ்சாலையில் இருந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஆய்வாளர் திரு. மூர்த்தி அவர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபட்ட பொதுமக்கள் பாராட்டு

திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் […]

Police Recruitment

சண்டையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை – காவல் ஆய்வாளர் அறிவுரை

. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இரு பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடனே விரைந்து சென்று சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு இருவருக்கும் போலீசார் அறிவுரைகள் வழங்கினார்கள். அதன்பின் அவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். மேலும் மாணவர்கள் அவர்களது தவறை உணர வேண்டும், இதுபோன்ற செயல்பாடுகளில் வருங்காலத்தில் ஈடுபடக் கூடாது. என்பதால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் […]

Police Recruitment

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த தாழம்பூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் (பயிற்சி) திரு.செல்வராஜ், தலைமை காவலர் திரு.தணிகை மலை, முதல்நிலை காவலர் திரு.புருஷோத் குமார், தனிப்பிரிவு தலைமைகாவலர் திரு. இளையராஜா ஆகியோருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 நேற்று இரவு  காஞ்சிபுரம் மாவட்டம்  தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை  சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை  மர்ம நபர்கள் இருவர் வழி கேட்பது போல் நடித்து அவரை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார்  குற்றவாளிகளை குறித்த அடையாளங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் அளித்தனர். குற்றவாளிகள் இருவரும் […]

Police Recruitment

சென்னையில் அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்பு – 2 பேர் கைது

சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்

Police Recruitment

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி தங்கம், குங்குமப்பூ பறிமுதல்

சென்னை துபாயில் இருந்து விமானம் நேற்று சென்னை வந்தது. சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமீர் (41), ஆரூன் (29) ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறையில் அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்கள் ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள 1.82 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களைக் […]

Police Recruitment

கார் மோதி காவலர் மரணம்: கல்லூரி மாணவர் கைது

தாம்பரம் குரோம்பேட்டை நியூகாலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடித்து, தனது இருசக்கர வாகனத்தில், வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். தாம்பரம் கடப்பேரி அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த தலைமைக் காவலர் வாகனத்தின் மீது பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த […]

Police Recruitment

தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி சாவு ;கள்ளக்காதலன் கைது

தூத்துக்குடி,2019 நவம்பர் 11 ; தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரை  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. தூத்துக்குடி விவேகானந்தா நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினர். ஆனால் நேற்று மதியம் வரை அந்த வீடு திறக்கப்படவில்லை.  வீட்டின் உள்ளே இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். […]

Police Recruitment

திருச்சி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டு கைதிகள் போராட்டம்

திருச்சி தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமைச் சேர்ந்த வெளிநாட்டுக் கைதிகள் நேற்று மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் இலங்கை, வங்கதேசம், பல் கேரியா, சீனா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த 72 பேர் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களில், 70 பேர் கடந்த 7-ம் தேதி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய்ய வலியுறுத்தல் தண்டனை காலத்தைத் தாண்டி ஆண்டுக்கணக்கில் சட்ட […]