Police Department News

மதுரை மாநகரில் முதல்நிலைக்காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்

மதுரை மாநகரில் முதல்நிலைக்காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்

தமிழ்நாடு அரசு காவலர்களின் நலன்கருதி, காவலர்களின் பதவி உயர்வில் மாற்றம் (10+3+10) செய்ததை தொடர்ந்து அரசின் ஆணைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக பணிக்கு சேர்ந்து 13 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் 13 ஆண்டுகள் பணிபுரிந்த 342 முதல் நிலைக்காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன்‌ இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ்கள் மற்றும் இரவு நேர பணியின் போது காவலர்களுக்கு உதவும் வகையிலான கைவிளக்குகளை (Torch light) வழங்கி, வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்),காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.