MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்
மதுரை மாநகரம், திலகர் திடல் காவல் ஆய்வாளர் ஆக பணிபுரிபவர் திருமதி. கவிதா அவர்கள்,
இவர் தன் சரக ரோந்து பணியின் போது பெரியார் நிலையம் அருகில் மிகவும் வறுமையில் இருந்த ஒரு திருநங்கையை பார்த்தார், அவர் மீது இரக்கப்பட்டு அவரை அழைத்து விசாரித்த போது அவர் தான் MBBS படித்திருப்பதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதில் சிறமமாக இருப்பதுடன் சமூகத்தில் அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி தான் வறுமையில் உள்ளதாக கூறினார். இதனையடுத்து, திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா அவர்கள் திருநங்கையின் கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்து அதன் உண்மை தன்மையை அறிந்து கொண்டார். பிறகு தன்னுடைய காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததுடன் மருத்துவ மனை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
சமூக அங்கீகாரமின்றி , மதுரையில் வறுமையில் வாடிய திருநங்கை தற்போது மருத்துவராக தன்னுடைய பணியை தொடங்க உள்ளார்.
இதற்காக பெரும் முயற்சி எடுத்த காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகிறது.