
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை இணைந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக Automated External Defibrillator (AED) என்று கருவி இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மின்னணு சாதனமாகும். இது Cardiac Arrest ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இதயத்துடிப்பை பகுப்பாய்வு செய்து தேவைப்பட்டால் சாதாரண இதயத்துடிப்பை மீண்டும் கொண்டுவர மின் அதிர்ச்சியை (Electric shock) அளிக்கிறது. இந்த சாதனம் மருத்துவப் பயிற்சி இல்லாதவர்களுக்கு கூட பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியை பயன்படுத்தும் வழிமுறைகளையும் தானியங்கி முறையில் சொல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Cardiac arrest- ஆல் பாதிக்கப்படும் நபர்களுக்கு இந்த கருவியை பயன்படுத்தும் போது 85% உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய முயற்சியினால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து மேற்படி சாதனத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக இன்று 27.6.2025-ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது .
மேலும் மதுரை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் பணிச்சுமை காரணமாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மனதளிவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களளின் சீரிய முயற்சியில் இன்று 27.6.2025 ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மனநல மருத்துவர் திரு.P.R.சுபாஷ் சந்திரன் PH.D.(Psy) Motivational Speaker அவர்களால் மன அழுத்தத்தை குறைக்கும் வகுப்பு (Stress Buster Program) நடத்தப்பட்டது இது கலந்து கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள் இந்த வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்
