Police Department News

மதுரை மாநகரில் முக கவசம் அணியாதவர்களை புதிய நவீன மென்பொருள் மூலம் கண்காணிப்பு

மதுரை மாநகரில் முக கவசம் அணியாதவர்களை புதிய நவீன மென்பொருள் மூலம் கண்காணிப்பு

மதுரை மாநகரில் கோவிட் 19 தொற்று நோயின் இரண்டாவது அலை பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் உபயோகிப்பது, போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்களில் சிலர் முககவசம் அணியாமல் நடமாடி வருவதை தடுக்க மதுரை மாநகர் காவல்துறை நவீன மென் பொருள் உதவியுடன் அத்தகைய நபர்களை சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு மூலம் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திலகர் திடல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள 20சிசிடிவிகேமராநெட்ஒர்கை பயன்படுத்தி முககவசம் அணியாத மற்றும் தவறாக முககவசம் அணிந்துள்ள மக்களை கண்டறிந்து விதிமீறியவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஓர் எச்சரிக்கையை Android mobile Application உதவியுடன் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியின் கைபேசிக்கு அனுப்பப்படும். இந்த மென்பொருள் உதவியுடன் தற்போதுள்ள சிசிடிவி நெட்ஒர்கை மேம்படுத்துவது மூலம் முககவசம் அணியாதவர்களை கண்காணித்து அவர்களின் புகைப்பட ஆதாரத்துடன் அவர்கள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 2020 ஆண்டு கொரோனா பெரும்தொற்று பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த போது இந்த முறை மதுரை மாநகரில் கடைபிடிக்கப்பட்டு தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறப்பாக பங்களித்தது. தற்போது பெருந்தொற்றின் 2 வது அலை பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல்துறையால் தற்போது வரை முகக் கவசம் அணியாமல் விதி மீறியவர்கள் மீது 4758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 9,51,600/−ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில் நுட்பம் விளக்குத்தூண் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10 சிசிடீவி கேமராக்களும், மதுரை மாநகரில், பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும், மதுரை மாநகரில் கொரோனா 19, பரவல் சிறப்பான முறையில் தடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் தவராமல் முகக் கவசம் அனுயுமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்த் சின்ஹா IPS. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.