தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு
புதிய மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019 ன் திருத்தத்தின்படி நேற்று முதல் சட்டத்தில் குறிப்பிட்டபடி புதிய திருத்தியமைக்கப்பட்ட வாகன விதிமீறலுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது
சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம்
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ. 10,000 அபராதம்.
செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து ரூ.10,000 வரை அபராதம்.
பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்.
தேவையில்லாமல் அதிக ஹரான் மற்றும் அதிக சத்தம் எழுப்பினால் ரூ.1,000 அபராதம்.
காப்பீடு இல்லாத வாகனத்தை இயக்கினால், இனி 2,000-க்கு பதில் ரூ.4,000 அபராதம்.
வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20,000 அபராதம்.
அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.2000 அபராதம்.
கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2000 அபராதம்.
இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, இரண்டாம் முறை ரூ.1500 அபராதம்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்.
தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் என அபராதத்தொகை உயர்த்தபட்டுள்ளது.
இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டதால் இனி வாகன ஓட்டிகளின் விதிமீறல் குற்றங்கள் குறையுமென போக்குவரத்து துணை ஆணையர் திரு.ஆறுமுகசாமி அவர்கள் கூறினார்.