Police Department News

நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபர்

நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அனிதா ஆரோக்கிய செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது தாய் நான்சி மற்றும் தோழி கீதாலட்சுமி ஆகியோருடன், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேவாயலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் டவுன்ஹால் ரோட்டில் மற்றொரு தேவா லயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்ேபாது அவர்களை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென்று அனிதாஆரோக்கிய செல்வி, கீதாலட்சுமி ஆகி யோர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த 2 பேரும் திருடன்… திருடன்… என கூச்சலிட்டனர்.அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி நகை பறிப்பு சம்பவத்தை அறிந்து, உடனே கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டார். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை யில் அந்த நபர் பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (வயது 28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து அனிதா ஆரோக்கிய செல்வியின் 1 பவுன் 5 கிராம் தங்க சங்கிலி மற்றும் கீதா லட்சுமி அணிந்திருந்த கவரிங் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.