சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி 1.பிளக்ஸ் வைக்கக்கூடாதுஅனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், 2.வாகனங்களில் மைக்செட் கட்டக்கூடாது, ட்ராக்டர், டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது 3.அனுமதிக்கப்பட்டஒவ்வொரு வாகனங்களிலும் அனுமதிஅட்டையை ஒட்ட வேண்டும், 4.வாகனங்களில் பேனர்கள்,கொடி மற்றும் கம்புகள் கட்டக்கூடாது 5.அரசியல் கட்சி தலைவர்கள்மற்றும் அவருடன் 3 வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 240 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் இ நியூஸ்
இளைஞரணி தலைவர்
ச.அரவிந்தசாமி
சிவகங்கை மாவட்டம்