திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு […]
மகேந்திரமங்கலம் சிறுவன் நீரில் மூழ்கி பலி மகேந்திரமங்கலம் அருகே பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது18). இவர் நேற்று நண்பகளுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றார். அப்போது கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அவர்கள் விரைந்து வந்து வலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து […]