மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் திரு.Glatson Jose (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக பெருங்குடி BHARAT DASS MAT.HR.SEC SCHOOL ல் நடைப்பெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தெற்கு மண்டல மாவட்ட காவல்துறை துரைப்பாக்கம் காவல்நிலையம் சார்பாக 20.04.2021 பெருங்குடியில் திரு. கிளாட்சன் அவர்கள் ICMR INDIAN COUNCIL MEDICAL RESEARCH அவர்கள் மூலமாக மக்கள் பின்பற்ற 21 Points கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக பள்ளி ஆசிரியர்கள் பாதசாரிகள் , ஆட்டோ ஓட்டுனர், சிறியவர், பெரியோர் , இரு சக்கர வாகன ஓட்டிகள் ,நான்கு சக்கர வாகன ஓட்டிகள்,மற்றும் வணிக வளாகம் , பூ வியாபாரம் செய்வோர் சிறு வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் கொரோனாவை தடுக்கும் வாசகங்கள் அடங்கிய கைபிரதிகள் வழங்கப்பட்டது மற்றும் ஒலிபெருக்கி மூலமாக கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் , சமூக இடைவெளி ,முக கவசம்,சானிடைசர் பயன் படுத்தவேண்டும் என்றும் காரணமின்றி வெளியே வரகூடாது என்றும் மருத்துவர் ஆலோசனை படி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ZINC மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.சத்யா L&W மற்றும் திரு.சேகர் L&W உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.இப்படிபட்ட செயல்களை காவல்துறையினர் மக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்கள்.