Police Department News

மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்

மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்

மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் மே 20 வரை ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமலாவதை அடுத்து தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து 9 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் மே 7 ம் தேதி அன்று மாலையே மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்காணிக்க ஏ.டி.ஜி.பிகள், ஐ.ஜிகள் அளவிலான அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரை மண்டலத்தில் உள்ள விருதுநகர், திண்டுக்கல், தேனி ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை கண்காணிக்க சைலேஷ்குமார் யாதவ் ஏ.டி.ஜி.பி. சமூக நலன், மற்றும் மனித உரிமை அவர்களை நியமனம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.