Police Department News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ.2,20,000/−மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்ற மருந்தக உரிமையாளர்கள் இருவரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயகுமார் அவர்கள் பாராட்டினார்கள். கோவில்பட்டியில் சட்ட விரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு திரு.தங்கராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. மாதவராஜா, திரு.சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமை காவலர் திரு. முருகன், காவலர்கள் திரு.ஶ்ரீராம், மற்றும் திரு.உலகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் நேற்று (13/05/21)தீவிர ரோந்து மேற்கொண்டதில் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி, காந்தி நகர், நேரு நகரை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் வயது 27/21, மற்றும் அவரது சகோதரர் கனேசன் வயது 29/21 ஆகியோர் சட்ட விரோதமாக ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பதற்காக மேற்படி மருந்தகத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தனிப்படையினர் சண்முகம், மற்றும் கனேசனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ரெம்டெசிவர் மருந்தை திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து கள்ளச் சந்தையில் வாங்கி அதை சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்திற்கு அதிக லாபத்திற்காக சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் ஒரு ரெம்டெசிவர் குப்பி ரூ.20,000/−ற்கு மேல் விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படையினர் சண்முகம் மற்றும் கனேசனை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2,20,800/− மதிப்பிலான 46 ரெம்டெசிவர் குப்பிகளை பறிமுதல் செய்யப்பட்டது. இரு குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எதிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 46 குப்பி ரெம்டெசிவர் மருந்தை கைப்பற்றிய தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.