தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் IPS., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் திரு. செந்தில்குமார் அவர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கபட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நாங்கள் இந்த உறுதிமொழியினை ஏற்கிறோம். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எங்களது பங்களிப்பினை நல்குவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம் என்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்