இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்