கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு)
24 .05.2021
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . மேலும் சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது , குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் குழுமமாக அமர்வது , இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது என கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதால் , இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில் தென்சென்னை மாவட்டம் OMR சாலையில் SRP Tools மற்றும் வேளச்சேரி சந்திக்கும் சிக்னலில் வாகன தணிக்கை நடந்து கொண்டிருக்கையில் ஆவணம் இல்லாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் வந்தவர்களை கொரோனா பற்றிய விழிப்புணர்வும் வாகனங்களை பறிமுதல் செய்தும் அரசாங்க உத்தரவுபடி காவல்துறை தகுந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
… காவல்துறை குழுவினருடன் இந்த வாகன தணிக்கை நடந்து வருகிறது.