Police Department News

கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி!

கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி!

மும்பையில் இளம் பெண் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய உடை ஒன்றை திரும்பக் கொடுக்க நினைத்து ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை போலிஸார் 36 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்தனர். அது எப்படி நடந்தது?

நாட்டில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மோசடி பேர்வழிகள் அமேஸான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு போன் செய்பவர்களையும் விட்டு வைப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை எண்ணை ஒத்த, எண்களை மோசடிக்காரர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர். இதனை பொதுமக்கள் கவனிக்காமல் அந்த நம்பருக்கு போன் செய்து மோசடி வலையில் சிக்கிக் கொள்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் மும்பையின் வடக்கு பகுதியில் காந்திவலியில் நடந்துள்ளது.ஸ்வேதா தலால் என்ற பெண் ஆன்லைனில் ஆர்டர் செய்து சில உடைகளை வாங்கினார். அதில் ஒரு உடையை மட்டும் திரும்ப கொடுக்கத் திட்டமிட்டார். இதையடுத்து ஆன்லைனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர் எண் இருக்கிறதா என்று ஸ்வேதா தேடிப்பார்த்தார். அதில் ஒரு நம்பர் இருந்திருக்கிறது. அந்த நம்பரை ஸ்வேதா தொடர்பு கொண்ட போது ராகுல் என்பவர் பேசினார். ராகுல் அப்பெண்ணிடம் நீங்கள் கூகுள்-பே அல்லது ஃபோன்-பே பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். ஸ்வேதா சுதாரித்துக்கொண்டு இல்லை என்று தெரிவித்துவிட்டார்.உடனே ராகுல் `நான் உங்களிடம் ஒன் டைம் பாஸ்வேர்டு எதுவும் கேட்க மாட்டேன். ஆனால் உங்களது வங்கி கணக்கில் உள்ள கடைசி நான்கு எண்களை மட்டும் கூறுங்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். இதில் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று நினைத்து தனது வங்கிக் கணக்கின் கடைசி நான்கு எண்களை மட்டும் தெரிவித்தார். அவர் சொன்ன அடுத்த சில நிமிடங்களில் ஸ்வேதாவின் வங்கி கணக்கில் இருந்து 24,999 ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியான ஸ்வேதா அந்த ஃபோன் நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை.ஸ்வேதா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் உண்மையான இணையத்தள வாடிக்கையாளர் எண்ணை தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் மர்ம ஆசாமி 1.99 லட்சத்தை ஸ்வேதாவின் வங்கி கணக்கிலிருந்து எடுத்துவிட்டான். இந்த சம்பவம் முதல் நாள் மாலையில் தொடங்கியது. மறு நாள் காலையில் ஸ்வேதா தனது வங்கிக்கு சென்று புகார் செய்தார். ஆனால் அவர்கள் புகாரை ஏற்க மறுத்து போலீஸில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். உடனே காந்திவலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சைபர் பிரிவில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அவரும் அதே போன்று புகார் செய்தார். உடனே விரைவாக விசாரணையை தொடங்கிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பகல் தலைமையிலான குழுவினர், ஸ்வேதாவின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் இதுவரை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்ததை கண்டறிந்தனர். உடனே அந்த பரிவர்த்தனை முழுமை பெறாமல் முடக்கினர். சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள் ஸ்வேதாவிடம் இருந்து சென்ற பணம் மீண்டும் அவரது வங்கிக்கணக்கிற்கே வந்துவிட்டது. இதனால் ஸ்வேதா போலீஸ் அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார். மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.