Police Department News

மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான்.

விருதுநகர் மாவட்டம்:-

மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான்.

அது நம்மில் பலரது வாழ்க்கையை அப்படியே புயலாக புரட்டிபோட்டவிதம் இன்று நம்முடன் உறவாடிக்கொண்டு இருந்த சொந்தபந்தம், நட்புறவுகள் பலரும் உயிருடன் இல்லை.

எத்தனை பெரிய பணம் படைத்தவர்களாலும் கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது.

இத்துனைத்துயரம் நடந்தாலும் அதனை எதிர்கொண்டு இன்று வரையிலும் களத்தில் இருப்பவர்கள் என்பது சில துறைகளும் அடங்கும் அதில் காவல் துறையும் ஒன்று.

பொதுமக்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் சரியான கோணத்தில் எந்த ஒரு பிரச்சினையையும் அசம்பாவிதம் இன்றி அதை சமயோசிதமாக காவல் துறை முன் நின்று சமாளித்து வருகின்றது.

அவர்களுக்குள்ளும் மனிதாபினமும் இருக்கிறது தன்னலமற்ற செயலால் கொரோனாவின் பிடி இன்று வரையிலும் இறுகிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களை காக்கும் பணியில் இருந்தபோதிலும்.

அரைவயிறு பசிக்காக யாரேனும் உதவமாட்டார்களா என்று ஏங்கி தவித்தவர்களுக்கு அருப்புக்கோட்டை காவல் துறை ஆல்பா பிரிவில் பணிபுரியும் காவலர்கள் அருப்புக்கோட்டை நகரின் எப்பொழுதும் சாலையே வீடாக நினைத்து வசிப்பவர்களுக்கு உண்பதற்கு உணவளித்தார்கள்.

திருக்குறள்:-

”பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது”

விளக்கம்:-

தான்பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் நற்செயலை உடையோரை பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.

என்ற வார்த்தைகளே சான்றாகும்.
மென் மேலும் இவர்களது பணிகள் எழுச்சிபெற போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.