ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும்
தென் மண்டல காவல் துறையினர்.!
கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில், ஊரடங்கின் போது பசியால் வாடும் ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உணவு பொருட்களை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையில் தென் மண்டலத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும், அது போன்ற நபர்களை கண்டறிந்து மனிதநேயத்தோடு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு தா.ச.அன்பு IPS, அவர்கள் உத்தரவு பிறப்பித்து வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் தேடி சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை ,பழங்கள், உணவு வகைகள், கிருமிநாசினி முகக் கவசங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தனியார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தென் மண்டல காவல் துறையினர் வழங்கி வருகின்றனர் .
இந்த தகவலை தொடர்ந்து தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்ததோடு சேவைகளை விடாது தொடருமாறு வாழ்த்தியுள்ளார் .
மேலும் தற்போது அரசின் ஊரடங்கு உத்தரவின் விதிமுறைகளை மீறி நடப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ,வீட்டைவிட்டு அவசியமின்றி வெளியில் வருவதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்..