இளைஞர்களிடம், பண மோசடி, திருப்பூர் டிக் டாக் பெண் மதுரையில் கைது.
மதுரை நகர் SS காலனி C.3 , காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி எல்லீஸ் நகர் , சூரியா குடியிருப்பை சேர்ந்தவர் ராமசந்திரன் வயது 24/20, இவர் பொழுதுபோக்கிற்கு டிக் டாக் செயலியை பயன் படுத்தி வந்தார். அப்போது திருப்பூரை சேர்ந்த அம்மு குட்டி ( உண்மையான பெயர் துர்க்கா தேவி,) என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவரது ஆசை வார்தைகளில் நம்பி அவரது வங்கிக் கணக்கில் 97,000/−ரூபாய் வரை பணத்தை அனுப்பியுள்ளார் அதன்பின் அவரது டிக் டாக் மற்றும் முகநூல் போலியானது என அறிந்து காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார்
இது போன்று மதுரை உள்பட மற்றும் பல பகுதிகளிலும் தொடர்ந்து இளைஞர்களிடம் ஆசை வார்த்தை பேசி நம்ப வைத்து பண மோசடி செய்து வந்திருப்பது தெரிய வரவே, அவரை பிடிக்க மதுரை மாநகர ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்களின் உத்தரவின்படி, குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார், அவர்களின் மேற்பார்வையில், உதவி ஆணையர் ஜெயக்குமார், C.3.காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் இளவரசு தனிப்படை அமைத்து , இவர்களின் உத்தரவின்படி விசாரணை அதிகாரியான சார்பு ஆய்வாளர் மணிக்குமார், மற்றும் தங்கமாரி, எலிசப்பத்ராணி ஆகியோர் திருப்பூர் சென்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்
தொடர்ந்து அவரது மொபைல் போனை கண்காணித்து வந்ததில் அவர் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து மதுரை அழைத்து வந்து அவர் மீது IPC 406, 420, மற்றும் தகவல் தொழில் நுட்பம் சட்டப் பிரிவு 66Dயின் படியும் வழக்கு பதிந்து விசாரணை செய்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்
போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளக்கத்அலி