முழு ஊரடங்கு காலத்தில் மதுரை மாநகர் S.S.காலனி காவல்துறையினர் ஏற்பாட்டில் 20 ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பொருட்கள் வழங்கிய S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை எளியவர்கள் 20 குடும்பங்களுக்கு அரிசிப் பை மற்றும் காய்கறி தொகுப்புகளை, மதுரை மாநகர் ,S.S.காலனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பிளவர்ஷீலா அவர்கள் வழங்கினர்.
மேலும், அவர் கூறுகையில் பொதுமக்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மேலும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகிய நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.