Police Department News

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து மதுரைக்கு 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து
மதுரைக்கு 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கஞ்சா கடத்தல், மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

கொரோனா ஊரடங்கு காலத்தில் நகரில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீர்நகர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் போலீசார் மேலபெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்று பிடித்து விசாரித்த போது அவர் திடீர்நகரை சேர்ந்த முனீஸ்வரன், வயது 24, என்பது தெரியவந்தது. , அவர் கையில் கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்வதும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் கஞ்சாவை
தேனியில் இருந்து கடத்தி வந்ததாக கூறினர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, கொரோனா காலக்கட்டத்தில் கஞ்சாவை அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து . அதற்காக அவர்கள் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை போலீசாருக்கு தெரியாமல் மதுரைக்கு கடத்தி வந்துள்ளதாகவும் அந்த கஞ்சாவை போடிலைன் பகுதியில் உள்ள முள்புதற்குள் சாக்கு பையில் வைத்து புதைத்து வைத்துள்ளதாகவும்,. அதில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக கஞ்சாவை எடுத்து நண்பர்கள் மூலம் பல்வேறு இடங்களில் விற்பதாகவும் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருந்த முனீஸ்வரனின் நண்பர்களான திடீர்நகரை சேர்ந்த இப்ராகிம்ஷா வயது,25, சிவபாலகிருஷ்ணன் வயது23, செல்லப்பாண்டி வயது 22, சுதர்சன் வயது 22, ஆகியோரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

ஊரடங்கு காலத்தில் எப்படி கஞ்சா கடத்தி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களை பிடித்த, திடீர் நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள், சார்பு ஆய்வாளர் பணராஜ், சோணை மற்றும் காவலர்கள் முத்துப்பாண்டி, சதீஸ்குமார், பிச்சை, கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.