Police Department News

நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர்.

நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர்.

சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும்,அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது நலன்களுக்காகவும் ஏற்கனவே பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அறிவுறைகளை சரியாக கடைபிடித்ததால் காவல்துறையினர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தனர்.அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் திரு.பிரதீப்குமார்(போக்குவரத்து) அவர்கள் கொரோனாவிலிருந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் உயிரை கொரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறார்கள்.

தென்சென்னை அடையாறு மாவட்டம் சார்பாக J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.விஜயரங்கன் மற்றும் திரு.சிவா அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதுமட்டுமின்றி திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கொரோனா முழு ஊரடங்கில் தினம் தோறும் மக்களுக்கு அடையாறு பகுதியில் சமூக இடைவெளியோடு முதலில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கபசூர குடிநீர்,முககவசம்,கிருமிநாசினி வழங்கியும் தினம் தோறும் ஆதரவற்றோருக்கு 100 பேருக்கு மேல் மதிய உணவு, தண்ணீர் பாட்டில், ஊட்டச்சத்து உணவு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து பொருட்கள் மற்றும் வடமாநிலத்தை சார்ந்தவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமன்றி கொரோனா விதிமுறைகளை மீறி காரணமின்றி ஊர் சுற்றும் மற்றும் e Pass இல்லாமல் வாகனத்தில் சுற்றுபவரை வாகன தணிக்கையின்போது வாகனத்தை அபராதம் விதித்தும் வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.இப்படி மக்களை கொரோனாவிலிருந்து முற்றிலும் மீட்டு படிப்படியாக குறைத்து வரும் காவல்துறையினர் தங்களுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்கள்.சென்னை பெருநகர காவல்துறைனரின் நல்ல செயல்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.