Police Department News

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜீவ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 12 ம் தேதி நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 8 கார் , ஒரு வேன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் பைக்கில் சென்று சேதப்படுத்தியுள்ளனர். சேதப்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேற்படி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி ஊரக காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. சங்கர் ஆகியோர் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள ஒளிப்பதிவுகளை ஆய்வு செய்ததில் தூத்துக்குடி அண்ணாநகர் 5 வது தெருவை சேர்ந்த பிச்சையா மகன் பாரத் வயது 25, /21,அண்ணாநகர் 8 வது தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் அஜித்குமார் வயது 21/21, ஆகிய இருவரும் அவர்களோடு மற்றொருவரும் சேர்ந்து பைக்கிள் சென்று மேற்படி 8 கார், 1 வேன், 1 ஆட்டோவை சேதப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இதில் ஈடுபட்டுள்ள எதிரி பாரத் என்பவர் தூத்துக்குடி நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவில் பணியாற்றிவரும் எஸ்.ஐ. மகன் என்பதும் தெரியவந்தது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

ஆகவே மேற்படி தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்த போது தபால் தந்தி நகரில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து அவர்களது இரு சக்கர வாகனங்களையும் மற்றும் 2 செல் போன்களையும் பறிமுதல் செய்தனர். தலை மறைவாக உள்ள மற்றொரு எதிரியேயும் போலீசார் தெடி வருகின்றனர்.

இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிகளை 5 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.