ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு தேவர் பேரவை பிரமுகரின் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு, ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் தமிழ்நாடு தேவர் பேரவையில் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு தனது சொந்த வேலையாக திண்டுக்கல் புறவழிச் சாலை வழியாக வெளியே சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் திடீரென பழுதான நிலையில் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு பழுது நீக்கம் செய்யும் நபரை அழைக்கச் சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததில் இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. பின்பு இது குறித்து ஈஸ்வரன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாஜலம் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார் மேற்படி வழக்கை ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள விசாரணை நடத்தி வருகின்றனர்.