சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார்
சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344 காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள 311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்துவந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் ஆயுதப்படை வளாகத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் தளம் (R.O Plant) அமைக்கப்பட்டது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைக்கு வருகைதந்து ஆயுதப்படையை ஆய்வுசெய்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு தளத்தை திறந்து வைத்து காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்
இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்