கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கற்பகம்
அவர்களின் காவல் பணியும், கருணை உள்ளமும்
சேலம் மாவட்டம் மேட்டூரில் பிறந்து கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்ட மகளிர் பெண் காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்கள் 1997 இல் பெண் காவலராக 21 வயதில் காவல்துறையில் சேர்ந்தார் .காவலர் ஆவதற்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சி பயிற்சியில் ஹையர் முடித்துள்ளார், ஹிந்தியில் ராஷ்ரபாஷாவும், சமஸ்கிருத மொழியில் மத்தியமாவும் கம்ப்யூட்டர். மற்றும் B.com முடித்த பின்புதான் காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று காவலர் ஆனார்.
1998 இல் குரூப்-1 தேர்வில் 20 மதிப்பெண்கள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார், ஆனாலும் தனது விடா முயற்சியாக மீண்டும் எஸ். ஐ தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தார்,
பிறகு 2004 ஆம் ஆண்டு அவரின் இரண்டாவது குழந்தை 45 நாட்களே ஆன நிலையில் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றார், அதன் தொடர்ச்சியாக தனது குழந்தைக்கு ஒருவருடம் ஆன நிலையில் சென்னை அசோக் நகரில் ஒரு வருடம் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.
திறமையால் கிடைத்த ரிவார்டுகளும்,சாதனைகளும்.
2005 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் குண்டடம், தாராபுரம், சப் டிவிஷனில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார்,
2006ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாநகரில் கடைவீதி காவல்நிலையத்தில் இருந்தபொழுது விஜயகுமார் ஐ.பி.எஸ் குழுவில் இணைந்து சத்தியமங்கலம் காட்டுக்குள் எஸ். டி. எஃப் பயிற்சியில் பெஸ்ட் ரிவார்டு விஜயகுமார் ஐ.பி.எஸ் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாநகரில் உக்கடம், போத்தனூர், செல்வபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் 10 வருடம் கிரைம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார், அப்பொழுது போத்தனூரில் திருமணத்திற்காக வைத்திருந்த 45 பவுன் நகை திருடு போய்விட்டதாக வந்த புகாரை தனது திறமையான விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடித்து 45 பவுன் தங்க நகையை மீட்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை திரும்ப கொடுத்த சாதனைக்காக சிவனாண்டி ஐ.பி.எஸ் அவர்கள் பெஸ்ட் ரிவார்டு வழங்கினார்.
செம்மொழி மாநாட்டில் சிறப்பாகப் பணி செய்து சாதனை புரிந்தமைக்கு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களிடம் பெஸ்ட் ரிவார்டு வாங்கினார்.
பதவி உயர்வு பெற்று 2006 ல் கோவை மாவட்டத்தில் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரானார். அப்பொழுது கருமத்தம்பட்டியில் வாய் பேச முடியாத பெண்கள் பயிலும் பள்ளி நிர்வாகி பாலியல் பலாத்காரம் புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சாதனை புரிந்தார் குறிப்பாக இந்த வழக்கில் புகார் கொடுத்தவர், குற்றவாளி மட்டும் சாட்சி ஆகிய மூவருமே காது கேட்காது வாய் பேசமுடியாது (டப் அன்டு டம்)
இதுபோன்ற சிக்கலான வழக்கை மிக திறமையாகவும் சாமர்த்தியமாகவும் குறுகிய காலத்திற்குள் தனது திறமையை வெளிப்படுத்தி குற்றவாளியை கண்டு பிடித்ததற்காக ரம்யா பாரதி எஸ்.பி பெஸ்ட் ரிவார்டு வழங்கினார்.
பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது அங்கு உள்ள ஒரு அரசு ஆரம்ப பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறு பிள்ளைகளுக்கு பிறப்புறுப்பில் வீக்கம் உள்ளதாக மருத்துவர்களிடம் தகவல் அளித்து குழந்தைகளை மருத்துவர் பரிசோதனை செய்தார், அப்போது ஆசிரியர்கள் குழந்தைகள் பூச்சி மாத்திரை சாப்பிட்ட பிறகுதான் இதுபோன்று நடந்துள்ளது என்றனர் பூச்சி மாத்திரையின் பக்க விளைவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மருத்துவர் பரிசோதனை செய்தார், பரிசோதனையில் குழந்தைகள் பாலியல் தீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால்தான் இதுபோன்று நடந்துள்ளதாக ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடம் தெரிவித்தார், மேலும் பெற்றோர்களிடம் புகார் அளிக்க சொல்லியும் அளிக்காத காரணத்தால் அந்தப் பெண் மருத்துவரே புகார் அளித்துள்ளார், அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கற்பகம் புகாரை ஏற்று விசாரணையில் ஈடுபட்டு சிறப்பான முறையில் பணிபுரிந்து குற்றவாளியை கண்டுபிடித்தார்.
மீண்டும் பணி மாறுதல் அடைந்து 2018 ஆம் ஆண்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வருடம் பணி புரிந்தார்,
2019ஆம் ஆண்டு தேர்தல் பணிக்காக பணி மாறுதல் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றினார், தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு கொரோனாவில் பர்கூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலரின் வளைகாப்பு நிகழ்ச்சி காவல் நிலையத்திலேயே செய்தமைக்கு சோசியல் மீடியாவில் அனைத்து பாராட்டுக்களையும் பெற்றமைக்கு ஏ.டி.ஜி.பி சென்னை ( குட் வொர்க் ) நற்பணி சான்றிதழ் வழங்கினார்கள்.
போஸ்கோ சட்டத்தில் ஒரு குற்றவாளிக்கு 44 வருடம் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருட தண்டனையும், குறுகிய காலத்தில் இரண்டு வழக்குகளையும் விரைந்து சாதனை செய்தமைக்கு நற்பணி சான்றிதழ் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டி கங்காதர் வழங்கினார்.
பிறவியிலேயே இரக்க குணம் கொண்ட இவர் சமூக சேவகராகவும் அவ்வப்போது செயல்பட்டு வருகிறார், காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணம் எங்கள் காவல் ஆய்வாளர் கற்பகம் என்று பல காவலர்கள் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கூறும் ஒரே வார்த்தையாக இருந்தது.
பெண்கள் மீது முழு அக்கறையும் பாதுகாப்பும் கொண்டவர் அவ்வப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியுள்ளார்.
இருளர் இன மக்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்கள் தற்போது முன் களப் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனோ பாதுகாப்பு உபகரணங்களை தற்பொழுது வழங்கி வருகிறார். ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டு வரும் அனைவருக்கும் உதவுவதில் (அன்னை தெரேசா) போன்று கருணை உள்ளத்தோடு உதவுபவர் காவல் ஆய்வாளர் கற்பகம் என்று பலரும் கூறி வருகின்றனர், இதுபோல் அனைவரிடமும் நண்பனாகவும் உதவும் எண்ணம் உள்ள சமூக சேவகராகவும் உள்ளம் கொண்ட இவர் பணியில் மென்மேலும் வளர வேண்டும் என்பது மட்டுமல்லாமல் இவரின் சமூக சேவையும் தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சாதனைகள் குறித்து ஆய்வாளர் கற்பகத்திடம் கேட்டபொழுது முதலில் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் கணவர், உயரதிகாரிகள் உடன் பணிபுரியும் காவலர்கள் என்னை உற்சாகபடுத்தி ஒத்துழைப்பு தந்த காரணத்தால்தான் என்னால் வெற்றிபெற முடிந்தது எனவே என்னுடைய சாதனைகள் மற்றும் பெருமைகள் அனைத்தும் இவர்களையே சேரும் என்று கூறினார்.