மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்டத்தில் 3 வாரங்களாகியும் இன்னும் நியமிக்கப்படாத துணை காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு என 4 சட்ட ஒழுங்கு காவல்நிலையமும் அதே போல் மகளீர், போக்குவரத்து பிரிவு, என காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை உட்கோட்ட அளவில் டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்யவும் காவல்துறையினரை வழி நடத்தி செல்வது என டி.எஸ்.பி.,யின் பங்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 வாரத்திற்கு முன்பு பணியில் இருந்த மேலூர் டி.எஸ்.பி.,ரகுபதிராஜா அவர்களை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மேலூருக்கென தனியாக டி.எஸ்.பி., நியமிக்கப்படாமல் கூடுதல் பொறுப்பாக மற்றொரு டி.எஸ்பி., அவர்கள் தற்போது கவனித்து வருகிறார். இந்த நிலையில் மேலூருக்கென ஒரு டி.எஸ்.பி., தனியாக வேண்டும் என கொரிக்கை எழுந்துள்ளது.