இளைஞர்களின் எழுச்சி நாயகன், புதிய டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அதன் பின் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளராக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், மாவட்டம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் துனிச்சலாகவும் நேர்மையாகவும் மிக சிறப்பாக பணியாற்றியவர்.
சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையராக சைலேந்திர பாபு அவர்கள் பணியாற்றிய போது சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த சிறிய , பெரிய ரவுடிகளின் அராஜாகத்தை ஓழித்து சென்னை வாழ் மக்கள் ரவுடிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு சைலேந்திர பாபு அவர்களின் துணிச்சலான நடவடிக்கை தான் காரணம்.
2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்ட போது சைலேந்திர பாபு அவர்கள் தனது உயிரை கூட பொருப்படுத்தாமல் உடனடியாக வெள்ள களத்தில் இறங்கி வெள்ளம் சூழ்ந்த இடங்களில் நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டு உள்ளார். தமிழக மக்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவர் சைலேந்திர பாபு அவர்கள்.
எனவே : தமிழ்நாடு காவல் துறை சட்ட ஓழுங்கு டிஜிபியாக பதவியேற்கும் சைலேந்திர பாபு அவர்களின் பணி சிறக்க போலீஸ் இ நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.